டோரண்டோவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டொரன்டோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டொரன்டோவின் பய்ரென் அவென்யூ மற்றும் டொனால்ட்ஸ் அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதும் அந்த இடத்திற்கு விரைந்த போது நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
குறித்த நபருக்கு முதலுதவி அளிக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதான அப்துல்லா கிஹானி என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
படுகொலை சம்பவங்களில் இந்த ஆண்டில் உயிரிழந்த 58 வது நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று ஆண்கள் தேடப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அது குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.