Home இந்தியா இந்திராகாந்தியின் நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

இந்திராகாந்தியின் நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

by Jey

இந்தியாவின் ஒரே ஒரு பெண் பிரதமரும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளுமான இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி அவரின் இரு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அவரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும், டெல்லி இந்தியா காந்தியின் நினைவிடமான சக்தி ஸ்தலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தற்போது, இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டரில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,”பாட்டி, உங்களின் அன்பையும், மதிப்பையும் எனது மனதில் சுமக்கிறேன். ஒருபோதும், எந்த இந்தியாவுக்காக உங்கள் உயிரை தியாகம் செய்தீர்களோ, அதை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்
பிங்க் நிறத்திற்கு

 

related posts