கனடாவின் வாட்டர்லூ பகுதியில் போதை மருந்து உட்கொண்ட இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாட்டர்லூ போலீசார் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஒழுங்குபடுத்தப்படாத அல்லது அனுமதியை பெற்றுக் கொள்ளப்படாத மருந்து மாத்திரைகளை எவரும் உட்கொள்ள வேண்டாம் என போலீசார் கோரியுள்ளனர்.
வாட்டார்லூவின் யூனிவர்சிட்டி மற்றும் பிக்சர் அமில்டன் வீதிகளுக்கு அருகாமையில் சில இளைஞர்கள் நோய் வாய்ப்பட்ட நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நோய்வாய்ப்பட்டிருந்த இளைஞர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கஞ்சா அல்லது வேறும் ஓர் போதைப் பொருளை இந்த இளைஞர்கள் உட்கொண்டிருக்க வேண்டுமென பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.