Home இந்தியா மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள்

by Jey

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவும், அமைதியை நிலைநாட்டும் வகையிலும் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

உலமக்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜமாத் நிர்வாகிகள், மதவாதத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதன்படி இன்று கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கேரள சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா தலைமையில் 15 பேர் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

அவர்களை கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரிகள், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அறிவுரை அங்கு ஒரு அறையில் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள், ஜமாத் நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினர்.

அப்போது பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். தேநீர் குடித்த பிறகு ஜமாத் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

related posts