Home இந்தியா குழந்தைகளை பாதுகாத்து கண்காணிப்பது பெற்றோரின் கடமை

குழந்தைகளை பாதுகாத்து கண்காணிப்பது பெற்றோரின் கடமை

by Jey

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவருடைய தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், மாணவரின் தாய் கலா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்டதாகவும், அவர் பணியில் இருந்த போது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர் 45 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்று அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பள்ளி வருகைப் பதிவு ஒவ்வொரு மாதமும் 50 சதவீதம் தான் இருந்ததாகவும், தனக்கு எதிரான புகார் ஆதாரமற்றது என்றும் வாதிடப்பட்டது.

related posts