தொழிற்சங்க போராட்டத்தின் போது பாடசாலைகள் மூடப்படும் என டொரன்டோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.
கல்விப் பணியாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று இவ்வாறு முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டால் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக டொரன்டோ மாவட்ட பாடசாலைகள் சபை அறிவித்துள்ளது.
சுமார் 55 ஆயிரம் கல்வி பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்னவோ அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் பாடசாலை சபை தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரையில் இறுதி அறிவிப்புகள் எதனையும் பணியாளர்கள் தொழிற்சங்க ஒன்றியம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.