அல்லாவாலா என்ற பகுதியில் பேரணி நடைபெற்றபோது பேரணியில் பங்கேற்ற நபர் இம்ரான்கான் நோக்கி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார்.
இதில், இம்ரான்கானின் காலில் குண்டு பாய்ந்தது. அந்த நபர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் படுகாயமடைந்தனர். ஒரு நபர் உயிரிழந்தார்
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை இம்ரான்கானின் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இம்ரான்கான் நாட்டு மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும், அதனால் அவரை மட்டுமே கொலை செய்ய தான் திட்டமிட்டதாகவும் வாக்குமூலத்தில் அந்த நபர் பேசினார்.
மேலும், இம்ரான்கானை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு லாகூரில் இருந்து வந்ததாகவும், இந்த திட்டத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரில் போலீசில் அளித்த வாக்குமூலம் வீடியோவாக சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராணுவத்திற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வாக்குமூலம் கசித்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மேலும் சில போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.