Home கனடா ஆயிரக்கணக்கான கல்வித்துறை பணியாளர்கள் இன்று போராட்டத்தில்…

ஆயிரக்கணக்கான கல்வித்துறை பணியாளர்கள் இன்று போராட்டத்தில்…

by Jey

பல்லாயிரக்கணக்கான கல்வித்துறை பணியாளர்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக ஒன்றாரியோ மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகள் ஸ்தம்பிதம் அடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக டொரன்டோ பெரும்பாகப் பகுதியில் அனேகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

டொரன்டோ குயின்ஸ் பார்க் பகுதியில் அரசாங்கத்தின் முக்கியமான அலுவலகங்களுக்கு எதிரிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண அரசாங்கம் இந்த போராட்டம் சட்டவிரோதமானது என அறிவித்திருந்தமே குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணி மற்றும் போராட்டம் காரணமாக வாகன நெரிசல் ஏற்படும் எனவும் போக்குவரத்துக்கு பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தொழில் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட முரண்பாட்டின் நிலை காரணமாக இவ்வாறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்

related posts