கனேடிய மத்திய அரசாங்கம் மாணவர் கடன் வட்டி ரத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில் மாணவர் கடன் வட்டி தற்காலிக அடை அடிப்படையில் நீக்கப்பட்டிருந்தது.
இந்த நடைமுறையை நிரந்தரமாக மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மத்திய அரசாங்கத்தின் வட்டியை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மாகாண ரீதியில் அறவீடு செய்யப்படும் மாணவர் கடன்களுக்கான வட்டி தொகை தொடர்ந்தும் அறவீடு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் மொத்தமாக ஒன்று தசம் எட்டு மில்லியன் மாணவ மாணவியர் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த கடனின் மொத்த தொகை 20.5 பில்லியன் டாலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்கம் காரணமாக கடுமையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பொருளாதார சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள இளம் கனடியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் அரசாங்கம் கடன் வட்டியை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது