நாம் அனைவரும் டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்டோம். நாம், நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கணினி திரையை நோக்கிக்கொண்டு, விசைப்பலகைக்கு மேல் குனிந்து அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அல்லது தொடர்ந்து, நீண்டநேரம் நம் கைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களை பார்க்கிறோம்.
இந்நிலையில், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்ட மனிதர்கள், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்பதை கண்டறிய டோல்ப்ரீபார்வர்டிங்.காம் என்ற நிறுவனம் ஆராய்ச்சி நடத்தியது.
அதன் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் 3டி(முப்பரிமாண) முறையில், மனிதனை போன்றதொரு கற்பனை உருவத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
அதற்கு மைண்டி எனப் பெயரிட்டு உள்ளனர். எதிர்காலத்தில் மனிதர்கள் குனிந்த முதுகு, நகம் போன்ற கைகள் மற்றும் டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளியாகும் ஒளியில் இருந்து நம் கண்களைப் பாதுகாக்க, கண்களில் கூடுதலாக இரண்டாவது கண் இமை கொண்டு புதிய உடல் வடிவம் கொண்ட மனிதர்களாக நாம் மாறிவிடுவோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும், 90 டிகிரி வளைக்கும் வகையில் முழங்கை, தடிமனான மண்டை ஓடு, சிறிய மூளை, கழுத்து கொண்ட மனிதர்களாக நாம் மாறிவிடுவோம்.
இது குறித்து, மேப்பிள் ஹோலிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் உடல்நலம் சார்ந்த ஆரோக்கிய நிபுணர் கேலேப் பேக்கே கூறியதாவது, மனிதர்கள் தங்கள் போனைப் பார்த்து மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவது, அவர்கள் கழுத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் முதுகெலும்பு சமநிலையை இழக்கிறது.
இதன் விளைவாக, உங்கள் கழுத்தில் உள்ள தசைகள் உங்கள் தலைப்பகுதியை தாங்கிக்கொள்ள கூடுதல் சக்தியை செலவிட வேண்டும் என்று கூறினார்.