Home இந்தியா மோர்பி நகரின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் சஸ்பெண்ட்

மோர்பி நகரின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் சஸ்பெண்ட்

by Jey

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி பாலிகா சந்தீப்சிங் ஜாலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மோர்பி நகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணைக்கு பின், மோர்பி பாலம் விபத்தில் அவர் கடமை தவறியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மோர்பி நகரின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலாவை மோர்பி நகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

related posts