Home சினிமா 30 வயதை தாண்டிய நடிகைகள் ‘கதாநாயகிக்கு லாயக்கு இல்லை

30 வயதை தாண்டிய நடிகைகள் ‘கதாநாயகிக்கு லாயக்கு இல்லை

by Jey

சினிமாத் துறையில் வயதான நடிகர்கள் தொடர்ந்து கதாநாயகர் களாக நடிப்பதும், 30 வயதை தாண்டிய நடிகைகளை ‘கதாநாயகிக்கு லாயக்கு இல்லை’ என்று அம்மா, அண்ணி கதாபாத்திரங்களுக்கு இறக்கி விடுவதும் வழக்கம்.

மூத்த நடிகர்கள் இளம் நடிகைகளை ஜோடியாக்கி அவர்களுடன் டூயட் பாடுவதும், முன்னாள் கதாநாயகிகளை எரிச்சல் படுத்தின. இந்த கோபத்தை பல நேரங்களில் அவர்கள் வெளிப்படுத்தியும் உள்ளனர்.

ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. 30 மற்றும் 40 வயதை தாண்டிய நடிகைகளும், கதாநாயகர்களுக்கு இணையாக தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தனித்துவம் காட்டி நடிக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா, சமந்தா, அமலாபால் என்று பெயர்கள் நீள்கிறது. இந்த மூத்த நடிகைகளின் படங்கள் வசூலிலும் சக்கைபோடு போடுகிறது.

ஜோதிகாவுக்கு 44 வயது ஆகிறது. அவரை முதன்மைப்படுத்தி வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே போன்ற படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது மலையாள படமொன்றில் மம்முட்டியோடு நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

 

related posts