Home கனடா ஒன்றாரியோவில் வாகன விபத்து மேற்கொண்ட நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

ஒன்றாரியோவில் வாகன விபத்து மேற்கொண்ட நபருக்கு 6 ஆண்டுகள் சிறை

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்ட நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய் ஒருவரையும் அவரது இரண்டு பிள்ளைகளைளும் இந்த விபத்தில் உயிரிழந்திருந்தனர்.

அதிக வேகமாக வாகனத்தை செலுத்திய காரணத்தினால் குறித்த பெண்ணும் குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 47 வயதான அலிசன் ஜோன்ஸ், 12 வயதான ஜுலியா ரிக்காபென் மற்றும் 7 வயதான மைல்ஸ் ஜோன் ஆகியோர் மற்றுமொரு வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தனர்.

இதேவேளை, வாகனத்தை விபத்தை மேற்கொண்ட போல் மென்சான் என்ற நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என  அலிசன் ஜோன்ஸின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

related posts