ஒன்றாரியோ அரசாங்கம் பேரம் பேசும் உரிமையை முடக்குவதாக குற்றச்சாட்டு
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பேரம் பேசும் தொழிற்சங்கங்களின் உரிமையை முடக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கல்விப் பணியாளர்கள் சார் தொழிற்சங்கங்கள் இந்த குறச்சாட்டை முன்வைத்துள்ளன.
பேரம் பேசுவதற்கான உரிமையை முடக்கும் நோக்கில் போராட்டத்தை சட்டவிரோதமானது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றொரன்டோவைச் சேர்ந்த சுமார் 55000 கல்விப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கூட்டு உடன்படிக்கை தொடர்பிலான முரண்பாட்டு நிலைமைகளினால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்சங்க போராட்டத்தினால் பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.