றொரன்டோவில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் பகல் நேரத்தில் அதி கூடிய வெப்பநிலை பதிவாகியது என தெரிவிக்கப்படுகின்றது.
1959ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி றொரன்டோவில் 20 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.
இந்த வரலாற்று சாதனை நேற்றைய தினம் முறியடிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெப்பநிலையானது 24.8 பாகை செல்சியஸாக உயர்வடைந்திருந்தது.
வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.