நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்கள், விண்மீன்கள், விண்கற்கள் என ஆச்சரியமளிக்கும் பல விசயங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் கருந்துளையும் அடங்கும். சில கருந்துளைகள் சூரியனை விட 5 முதல் 100 மடங்கு அதிக எடையை கொண்டிருக்கும்.
இவை ஸ்டெல்லார்-மாஸ் வகையை சார்ந்தவை. இந்த வகை கருந்துளைகள் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 10 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த முறை வானியல் நிபுணர்களின் பார்வைக்கு இந்த வகை கருந்துளைகள் வந்துள்ளன. பொதுவாக, கருந்துளைகள் அவற்றின் ஊடே ஒளியை கூட கடந்து செல்ல விடாது. ஏனெனில், இந்த கருந்துளைகளின் மையத்தில் ஒளி மற்றும் பொருட்கள் உள்வாங்கப்படும்.
அண்டவெளியின் வில்லனாக காணப்படும் இந்த கருந்துளையில் ஒன்று சமீபத்தில் பூமிக்கு மிக அருகே நெருங்கி வந்துள்ளது விஞ்ஞானிகளை தீவிர ஆராய்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் பரிணாமம் பற்றி புரிந்து கொள்ளும் ஆய்வுக்கு அவர்களை உட்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு பூமியை நெருங்கிய கருந்துளையை விட மூன்று மடங்கு மிக அருகே இந்த கருந்துளை நெருங்கி உள்ளது.