ஒன்றாரியோவில் மீண்டும் தொலைக்கல்வி நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரையில் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் காரணமாக அநேகமான பாடசாலைகள் நேரில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகள் தொடர்வதனை தவிர்த்துக் கொண்டுள்ளது.
அதற்கு பதிலீடாக இணைய வழியில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
கடந்த நான்காம் திகதி கல்விப் பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் நிகழ்நிலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பாடசாலைகளிடம் கோரப்பட்டுள்ளது.