அமெரிக்காவுடனான உறவுகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இரு நாடுகளினதும் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு அப்பால் இரு தரப்பு உறவுகள் ஸ்திரமான நிலையில் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்படுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அமெரிக்காவின் மிகவும் வித்தியாசமான ஆட்சியாளர்களுடன் கனடா இணைந்து செயற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.