Home இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு நோய் பரவும் அபாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு நோய் பரவும் அபாயம்

by Jey

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமூக வைத்திய சங்கத்தின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவின் டி சொய்சா நேற்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த நிலைமையை எதிர்கொள்ளும் விடங்களை விமான நிலையத்தில் தெரிவிக்கவும், அறிகுறிகள் தென்பட்டால் விமான நிலைய மருத்துவப் பிரிவுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விமான நிலைய வளாகத்தில் இதற்கான மருத்துவ பரிசோதனை அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வீக்கம், தோல் புள்ளிகள், கொப்புளங்கள், காயங்கள் போன்றவை இருந்தால் உடனடியாக விமான நிலைய மருத்துவப் பிரிவை அணுக வேண்டும்.

குரங்கம்மைக்கு போடக்கூடிய தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சுகாதார துறைகள் சில விவாதங்களுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அந்த தடுப்பூசிகளின் வெற்றி 100 சதவீதம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்து்ளளார்.

related posts