ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. சிட்னியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதன்படி நியூசிலாந்து அணியின் சார்பில் பின் ஆலென் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பின் ஆலென் 4 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிவான் கான்வேவும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பீல்டிங் காரணமாக தொடர்ந்து ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணியினர் போராடினர். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.