ஒன்றாரியோ மாகாணத்தில் முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவின் மருத்துவ அதிகாரி டொக்டர் கேட் முல்லிகன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவச பயன்பாட்டை கட்டாயமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவாசத்துடன் தொடர்புடைய வைரஸ் தொற்று பரவுகை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிய பிள்ளைகளின் பெற்றோர் என்ற வகையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் முகக் கவசத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு டொக்டர் கேட் முல்லிங்கன் தெரிவித்துள்ளார்.