ஒன்றாரியோ மாகாணம், றொரன்டோவில் கட்டாய தடுப்பூசி நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பணியாளர்களுக்கு இதுவரை காலமும் காணப்பட்ட கட்டாய தடுப்பூசி நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் இந்த நடைமுறை ரத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 வீதமான பொதுமக்களும், 99 வீதமான பணியாளர்களும் குறைந்தபட்சம் இரண்டு கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுக்கும் பணியாளர்கள் பணி நீக்கப்பட்டிருந்தனர்.