உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் . தற்போது வரை முடிவடையாமல் தொடரும் போரில் இதுவரை இரு தரப்பிலும் 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
இது குறித்து அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் உயிரிழந்ததோடு, இரு நாட்டு தரப்பிலும் 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பரஸ்பர அமைதி வெறும் இராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே முடியாது. அதற்கு நீங்கள் வேறு வழிகளில் திரும்ப வேண்டும் என்று கூறினார்.
அத்தோடு குறித்த போர் நடவடிக்கையால் உக்ரேனில் கடந்த ஆறு மாதங்களில் 50 இலட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.