Home இலங்கை இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள்

இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள்

by Jey

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12.11.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்று பாராட்டுகின்றது.

இவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்ட தமிழக அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது.

இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாக கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12,000 முன்னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்நடத்தையாளர்களாக அடையாளம் காணப்பட்டு இவர்கள் சமூகமயமாக்கப்பட்டனர்.

related posts