ஐ.எஸ் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட சிறுவன் எட்டு ஆண்டுகளின் பின்னர் குடும்பத்துடன் மீள இணைந்துள்ளான்.
கனடாவின் வின்னிபிக் பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டிருந்தான்.
ஹய்யட் அல்ஹுசெய்ன் என்ற சிறுவன் கடந்த 2014ம் ஆண்டில் ஈராக்கில் வைத்து கடத்தப்பட்டிருந்தான்.
ஹய்யட்டுக்கு ஆறு வயது இருக்கும் போது சிறுவன் கடத்திச் செல்லப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஸ்டசமாக ஹய்யட், கடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்து ஈராக் அகதி முகாமொன்றில் சரணாகதி அடைந்திருந்தான்.
அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் காத்திருந்ததன் பின்னர் சிறுவன் கனடாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.