முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண முன்னணி மருத்துவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முக கவசம் அணிந்து கொள்ளுமாறு கட்டாயமாக்கப்படவில்லை.
எனினும், பொது இடங்களில் முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் தொற்று நோய்கள் பரவும் சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் முக கவசம் அணிவது பொருத்தமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் கிரேன் மூர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.