கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக பணிபுரிந்த லெனின் மதிவாணம் தனது 51 ஆவது வயதில் இன்று காலமானார்.
மலையக இலக்கியத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்த எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் செயற்பட்ட அவர் சுகயீனம் காரணமாக காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர், கல்வியாளர், லெனின் மதிவாணம் இன்று. காலமானார். காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆசிரியராக தொழில் தொடங்கிய அவர் வெளிவாரியாகவே இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றதோடு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் விளங்கினார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக திடீர் நோய்த்தாக்கத்துக்கு உள்ளான லெனின் மதிவானம் இன்று காலமானார்.