ஒன்றாரியோ மாகாணத்தின் ஹுஸ்டன் என்னும் பகுதியில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வீடு ஒன்றிலிருந்து இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திடீரென இந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளமை குறித்து பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணங்களை கண்டறிவதற்கு பிரேத பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
இந்த மரணங்களினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.