ஜனாதிபதியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று காலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கூட்டத்திற்கு பிறகு அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றம் செல்ல உள்ளனர்.
ஆளும் கட்சியில் இணையும் உறுப்பினர்கள்
இதேவேளை, ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், இந்த வாரத்தில் மேலும் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகி ஜனபலவேக மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளனர்.