முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் கோரியுள்ளார்.
முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
முக கவசம் அணிதல் முதலாவது முக்கியமானது எனவும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வது இரண்டாவது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக உள்ளக பகுதிகளில் முக கவசங்களை அணிந்து கொள்வது முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கட்டாய முக கவச பயன்பாடு குறித்து எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.