பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் இந்தியா மிக கண்ணியம் வாய்ந்த உறவை கொண்டுள்ளது.
இதுபோன்ற அமெரிக்காவின் கண்ணியமிக்க உறவு பாகிஸ்தான் நாட்டுடனும் இருக்க வேண்டும் என அடிப்படையிலேயே நான் விரும்புகிறேன் என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா பிரதமர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்ற திட்டமிட்டது என ஒரு சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் கூறிய நிலையில், அவர் தற்போது இதனை கூறியுள்ளார். உக்ரைனுடனான போரின்போதும், ரஷிய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த சூழலில், தனது மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா பதில் கூறுகிறது. அமெரிக்காவுடன் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது.
ஆனால், பாகிஸ்தானும் முடியாது என கூற கூடிய தருணங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.