Home உலகம் நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 600 துப்பாக்கி சூடு

நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 600 துப்பாக்கி சூடு

by Jey

நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 600 துப்பாக்கி சூடு சம்பவங்கள் வரை நடந்து உள்ளன என துப்பாக்கி வன்முறை சம்பவங்களின் தொகுப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. அவற்றில் இந்த சம்பவமும் ஒன்று. அமெரிக்காவில் பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 68 துப்பாக்கி சூடு நடந்து உள்ளது.

இவற்றில் கல்லூரி வளாகங்களில் நடந்த 15 சம்பவங்களும் அடங்கும். ஒவ்வொரு சம்பவத்திலும் குற்றவாளியால் குறைந்தது ஒருவர் சுடப்பட்டு உள்ளார்

. அமெரிக்க வரலாற்றிலேயே கொடூர துப்பாக்கி சூடு கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள விர்ஜீனியா டெக்கில் 32 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது மாணவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது வேதனை ஏற்படுத்துகிறது என்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறினார்.

அதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், பெரிய அளவில் அதனால் பலன் ஏற்படாத சூழல் உள்ளது. தொடர்ந்து, நடப்பு ஆண்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

 

அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை இரவு 10.30 மணியளவில் அவர்களை நோக்கி திடீரென மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.

அவர்கள் கால்பந்து வீரர்கள் என தெரிய வந்து உள்ளது. காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் பல்கலை கழக வளாக பகுதியில் தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

related posts