Home உலகம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு

by Jey

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்தது.

ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இரு நாடுகளையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன.

எனினும், போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல நகரங்கள் ரஷிய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தன.

கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. எனினும், பல நகரங்களை ரஷியாவின் பிடியில் இருந்து உக்ரைன் மீட்டது. இதன்படி சமீபத்தில், ரஷிய படையிடம் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டது.

தொடர்ந்து கடுமையாக சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும் அறிவிப்பை ரஷியா வெளியிட்டு அதன் படைகள் வெளியேறின.

 

related posts