Home உலகம் மாங்குரோவ் காடுகளுக்கு பார்வையாளர்களாக சென்ற நாடுகளின் தலைவர்கள்

மாங்குரோவ் காடுகளுக்கு பார்வையாளர்களாக சென்ற நாடுகளின் தலைவர்கள்

by Jey

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார்.

இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சென்று உள்ளனர்.

இதன்பின், பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கியது. வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் மாநாட்டில் உரையாற்றினர்.

இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளில், பாலி நகரில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பார்வையாளர்களாக சென்றனர்.

இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜி-20 அமைப்பின் பிற தலைவர்களும் மாங்குரோவ் வன பகுதிக்கு சென்றனர். பின்பு மரக்கன்றுகளையும் அவர்கள் நட்டனர்.

related posts