றொரன்டோவில் பனிப்பொழிவு தொடர்பில் எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
குளிர் காலத்தில் முதல் பனிப்பொழிவு இன்றைய தினம் பதிவாகியுள்ளதுடன், இன்றிரவு 5 முதல் 10 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நகரம் முழுவதிலும் பனிப் படர்ந்திருக்கும் எனவும் பயணங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழமுக்க நிலையினால் இவ்வாறு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.