ஈரான் மீது கனேடிய அரசாங்கம் மேலும் தடைகளை அறிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் ரஷ்யாவுக்கு ட்ரோன்களை வழங்கியமை ஆகிய காரணிகளுக்காக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
கனடா ஈரான் மீது இந்த ஆண்டில் விதிக்கும் ஐந்தாவது கட்ட தடை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவதாக கனடா தொடர்ச்சியாக ஈரான் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் உக்கிரேன் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யாவிற்கு ஈரான் உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு ஈரான் ட்ரோன்களை வழங்கியுள்ளதாகவும் இதை எதிர்த்து தடை விதிக்கப்படுவதாகவும் கனடா அறிவித்துள்ளது. ஈரானின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சகல ராஜதந்திர கருவிகளையும் பயன்படுத்துவதற்கு தயங்கப் போவதில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.