போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் என கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நேட்டோ உறுப்புரிமை நாடுகளில் ஒன்றான போலந்து மீது ரஸ்யா ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியிருந்தது.
உக்ரைன் மீது நடாத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் போலந்து மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், திட்டமிட்ட வகையில் ரஸ்யா தாக்குதலை நடாத்தியதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.