அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி அளித்துள்ளதாக ஒன்றாரியோ மாகண கல்வி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில் ரீதியான கோரிக்கைகள் பல முன்வைத்து கல்விப் பணியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கம் கல்விப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி கல்விப் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதி நாட்களில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒன்றாறியோ மாகாணத்தில் கல்விப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தர்ப்பத்தில் அனேகமான பாடசாலைகள் கல்வி நடக்கவடிக்கைகளை இடைநிறுத்தி இருந்தது.