“கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது தென்பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டதாக குறித்த பிரதேச மக்களும் மக்கள் அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதியினை அந்த மக்களுக்கே மீளவும் பெற்றுக்கொடுக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஜனாதிபதிக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அப் பிரதேச மக்கள் எனது கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளனர்.
கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம்
கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு 12.01.2022 ஆம் திகதி பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு 11.02.2022 வரை விண்ணப்ப முடிவு திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை உலக வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் இன்றுவரை இத்திட்டத்திற்கான எவ்வித பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.
ஆனால் இதற்கு பின்னரான காலத்தில் புதிய புதிய குடிநீர் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு கேள்வி கோரல்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுளளன.