டொரன்டோவில் சுமார் 600 கிலோ கிராம் எடையுடைய போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இந்த போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொக்கேய்ன் மற்றும் மெத்தப்பட்டமைன் ஆகிய இரண்டு வகை போதைபொருட்களுமே இவ்வாறு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதை பொருட்களின் மொத்த சந்தை பெறுமதி சுமார் 58 மில்லியன் கனடிய டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சில வீடுகளை சோதனை இட்டு இந்த போதை பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்