இலங்கையில் ஜனாதிபதியாக பணத்திற்கு ஆசைப்படாத ஒருவரே வர வேண்டும் என நபரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரூடம் பார்த்து பெறும் பணத்தில் தனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பணத்தாசை அல்லது பதவியாசை கொண்டவர்களாக இரு்கிறார்கள்.
எனவே இந்த நாட்டிற்கு பணத்திற்கு ஆசைப்படாத நல்ல மனிதரொருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை என்பது வல்லராசாக இருக்காவிட்டாலும் மூன்று வேளைக்கு ஐந்து வேலை சாப்பிட்ட நாடு.
ஆனால் இப்போது உணவுக்கு மிகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என அவர் ஆத்திரமாக தெரிவித்துள்ளார்.