Home உலகம் மிகவும் சவாலானப் பணி – உணவு டெலிவரி

மிகவும் சவாலானப் பணி – உணவு டெலிவரி

by Jey

மிகவும் சவாலானப் பணியை சில சமயங்களில் நேர்த்தியாக கையாளும் உணவு டெலிவரி ஏஜென்ட்டுகளின் சுவாரஸ்ய விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். விருப்ப உணவுகளை மொபைல் வழியாக ஆர்டர் செய்தால் நாம் தங்கியிருக்கும் முகவரியிலேயே டெலிவரி செய்து விடுகிறார்கள்.

பொருளாதாரத் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்ன தான் ஒரு வீட்டில் ஆண்கள் வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளின் படிப்பு, குடும்ப தேவை, மருத்துவ செலவு என அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை.

இச்சூழலில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைக்கு உள்ள சூழலில் ஒரு டூவிலர் இருந்தால் போதும், டெலிவரி ஏஜென்ட்களாக ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் அப்பணியை மேற்கொள்ளலாம்.

அப்படி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாடு விட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் கூட உணவு ஆர்டரை டெலிவரி செய்கிறார்கள் என்று கூறினால் நம்ப முடியுமா? சென்னையைச் சேர்ந்த மானசா கோபால்,சிங்கப்பூரில் இருந்து உணவு ஆர்டரை டெலிவரி செய்வதற்காக நான்கு கண்டங்களில் 30,000 கிமீ தூரம் கடந்து அண்டார்டிகாவின் தொலைதூரப் பகுதி வரை தனது பயணத்தை ஆவணப்படுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அவர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்ட வீடியோவை 37,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

related posts