ஒன்றாரியோ மாகாணத்தில் அலைபேசி வழியாக மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்கம் மக்களுக்கு பணம் வழங்குவதாக தெரிவித்து இந்த மோசடி இடம் பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அலைபேசி வழி குறுஞ்செய்திகள் ஊடாக மக்களை சிலர் ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளை வெப்பமாக்குவதற்கு பயன்படுத்தும் சக்தி வளத்தை குறைவாக பயன்படுத்தும் பிரஜைகளுக்கு இவ்வாறு அரசாங்கம் கொடுப்பனவினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் இவ்வாறு கொடுப்பனவுத் தொகை வழங்கப்படுவதாக குறுஞ்செய்தி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒன்றாறியோ சக்திவளத்துறை அமைச்சு இவ்வாறான எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், வசதி குறைந்த மக்களுக்கு சக்திவள பயன்பாடு தொடர்பில் சில சலுகை வழங்கப்படுவதாகவும் சில கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவை அதிகார பூர்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டி உள்ளது.