கனடாவின் பசுமை கட்சியின் தலைவியாக எலிசபெத் மே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சமஸ்டி தேர்தலில் பசுமைக் கட்சி படுதோல்வி அடைந்திருந்தது.
மேலும் உள்ளகப் பிரச்சனைகள், கட்சிக்கான நிதி திரட்டலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற பல்வேறு பிரச்சனைகளை பசுமை கட்சி எதிர்நோக்கி வரும் நிலையில் எலிசபெத் மே மீண்டும் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் மே பசுமைக் கட்சியை தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் தொகுதி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினராக மே கடமையாற்றி உள்ளார்.
கட்சித் தலைமை பதவிக்காக போட்டியிட்ட ஜனத்தொன் புலன்ட் கட்சியின் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறெனினும், கட்சியின் யாப்பினை மாற்றி ஜனத்தொன் கட்சியின் இணை தலைவராக பதவி உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மே தெரிவித்துள்ளார்.