Home இலங்கை இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஐ.நா

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஐ.நா

by Jey

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை அமைப்பான யுனிசெப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் நேரடியாக கடுமையான போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகளில் சுமார் 22 லட்சம் பேரளவிலான குழந்தைகள் போஷாக்கு தொடர்பான பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவி தேவைப்படுவோராக காணப்படுகின்றனர்.

இலங்கையில் சுமார் 4.8 மில்லியன் குழந்தைகள் கல்வி விடயங்கள் தொடர்பான தேவைகளைக் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.

மேலும் 6.2 மில்லியன் இலங்கையர் உணவுப் பற்றாக்குறை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

related posts