Home இலங்கை ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுக்க வந்தவர் அல்ல

ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுக்க வந்தவர் அல்ல

by Jey

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை கலைத்துவிட்டு புதிய நாடாளுமன்றத்தை வலியுறுத்தி பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அடுத்த கட்டமாக இளைஞர்களை அணிதிரட்டுவதன் ஊடாக புத்திஜீவிகள், பல்வேறு திறமைகளை கொண்ட இளைஞர்கள் ஒன்றாகி உலகத்தின் மிக சிறந்த நாடாக இலங்கையை உருவாக்குவதற்கு அணி திரள வேண்டும் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான சக்தியை திரட்டுவதற்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றோம். பொருளாதார ரீதியாக நாடு பாரிய பாதாளத்திற்கு சென்றுள்ள சூழலை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

இனவாதத்தை மையமாக கொண்டு கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருந்தார். டீல்காரர்களுக்கு நாட்டை விற்றதன் காரணமாக தாம் வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த இளைஞர் சமூகம் மற்றும் மக்கள் கோட்டாபய ராஜபக்சவை விரட்டி அடித்தார்கள்.

இந்நிலையில் திட்டம் தீட்டி தனது சேவகன் ரணில் ராஜபக்சவை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுக்க வந்தவர் அல்ல என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதோடு மக்களுக்கு எதிரான ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்கின்ற ஆட்சி அதிகாரத்தை இல்லாதழித்து மக்களுக்கான அரசியலையும் மக்கள் நல ஆட்சியை கட்டி எழுப்புவதற்கான வேலைத் திட்டத்தில் சோசியல் இளைஞர் சங்கம் தொடர்ந்தும் இணைந்திருக்கும்.

நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டி வரிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அறவிட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு தெற்கு மலையகம் முஸ்லிம் என்ற அனைத்து பிரதேச மக்களும் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

related posts