அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஸ்னோஹோமிஷ் நகரில் உள்ள ஹார்வி பீல்ட் விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். கிளம்பிய சிறிது நேரத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென உடைந்தது.
அதை தொடர்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், இது குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.