Home உலகம் சீனாவில் தொழில்துறையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு

சீனாவில் தொழில்துறையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு

by Jey

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக ஜிரோ கோவிட் பாலிசியை பின்பற்றும் சீனா, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முடக்கி வருகிறது. இதனால், தொழில் நடவடிக்கைகளும் முடங்கியிருக்கின்றன.

சீனாவில் தொழில்துறையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சர்வதேச வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீனாவில் மக்களின் தேவைகள் குறைந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. நுகர்வோர் வாங்குவதில் தொய்வு ,உற்பத்தி பாதிப்பு போன்றவை சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கவலை எழுந்துள்ளது.

related posts