Home இந்தியா நாட்டில் அமைதியை சீர்குலைக்க, திட்டம்

நாட்டில் அமைதியை சீர்குலைக்க, திட்டம்

by Jey

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி அன்று மாலையில் ஒரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பயங்கரவாதி ஷாரிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான பயங்கரவாதி ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததை தேசிய விசாரணை முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் குக்கர் வெடிகுண்டுடன் பல வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீவிர விசாரணை இந்த நிலையில் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், நாச வேலையை அரங்கேற்றவும் திட்டமிட்டு மங்களூருவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பேரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

related posts