மத்திய கொலம்பியாவின் ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதியது.
விபத்துக்குள்ளான விமானம் காற்றில் அடர்த்தியான கறுப்பு புகையை உமிழ்ந்த வண்ணம் இருந்தது. விமான நிலையத்தின் டுவிட்டர் கணக்கு, விமானத்தில் இருந்த ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் இறந்ததாக அறிவித்தது.
இந்த விபத்தில் ஏழு குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரேனும் காயமடைந்தார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிறிய ரக விமானம் டேக்ஆப் செய்யும் போது என்ஜின் செயலிழப்பைக் காட்டியுள்ளது. ஆனால் ஓலயா ஹெர்ரெரா விமான நிலையத்திற்குத் திரும்ப முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.